⭐பாஸிட்டிவ் என்ற வார்த்தையை சிந்திக்கும் போது பலருக்கும் மகிழ்ச்சி என்ற வார்த்தை தான் நினைவுக்கு வரும். நேர்மறையான எண்ணங்களே மகிழ்ச்சியைக் கொடுக்கும்.ஒரு குறிப்பிட்ட எதிர்மறையான சூழ்நிலையில் நாம் எவ்வாறு எண்ணம் கொள்கிறோம் என்பதே முக்கியமானது. நாம் நேர்மறையாக எண்ணுகிறோமா , எதிர்மறையாக எண்ணுகிறோமா என்பதே முக்கியமானது. நம் எண்ணங்களை நாம் அவ்வேளையில் கட்டுப்படுத்த வேண்டும். ஏனெனில், எண்ணங்களே நம்மை செதுக்கும் கருவி.
⭐உங்களை உணருங்கள்
உங்களால் உங்கள் பிரச்சினையைக் கண்டு பிடிக்க முடியாவிடில் உங்கள் எண்ணங்களையும் மாற்றிக் கொள்ள முடியாது. ஆம்.எனக்கு எதிர்மறையான எண்ணங்கள் உள்ளது. அது என்னை வருத்தமாக்குகிறது என்பதை உணர்வதே முக்கியம்.உங்கள் எண்ணங்களை வைத்து உங்களை மதிப்பிடாதீர்கள் .நான் இப்படிப் பட்டவள் / நான் இப்படிப்பட்டவன் என்று. உங்கள் எண்ணங்களை மட்டுமே மதிப்பிடுங்கள் . உங்களை அல்ல.உங்களால் எதை மாற்ற முடியாது என்பதையும் உணருங்கள். உதாரணமாக நீங்கள் தனிமை விரும்பி என்றால் உங்களை மாற்றிக் கொள்ள முயற்சி செய்யாமல் இருப்பதே நலம். மாற்றிக் கொள்ள முயற்சித்தால் மகிழ்ச்சியின்மையை தான் உணர முடியும்.
⭐குறிக்கோள்களை உருவாக்குங்கள்
குறிக்கோள் நேர்மறையான மனநிலையை வாழ்க்கையில் கொடுக்கும்.நீங்கள் எண்ணிய குறிக்கோளை செய்து முடிக்காவிட்டால் கூட, நீங்கள் நம்பிக்கையான வராக இருப்பீர்கள் என்று ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. முதலில் சிறிய குறிக்கோளை உருவாக்குங்கள். நேர்மறையான குறிக்கோளை உருவாக்கிக் கொள்வது சிறந்தது. உதாரணமாக ஜங்க் ஃபுட் சாப்பிடக் கூடாது என குறிக்கோளை உருவாக்கக் கூடாது. மாறாக, பழங்கள், காய்கறிகள் அதிகமாக உட் கொள்வேன் என்ற நேர்மறையாக எண்ண வேண்டும்.
⭐உங்களை நீங்களே பாராட்டுங்கள்.
உங்களை நீங்கள் உயர்த்திக் கூறினால் மன அழுத்தம் குறையும்; எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்; எதையும் எதிர்த்துப் போராட முடியும் என்ற எண்ணம் உருவாகும். உதாரணமாக, நீங்கள் யாரையும் கேலி செய்யாவிடில் நான் நல்ல பண்பை உடையவன் ;நான் யாரையும் கேலி செய்தது இல்லை என உங்களை நீங்கள் பெருமையாக எண்ணலாம். நீங்கள் மிகவும் அழகானவராக உணர்ந்தால், நான் மிகவும் அழகானவன் என்று உங்களை நீங்களே பாராட்டுங்கள்.
⭐நேர்மறையான எண்ணங்கள் :
நேர்மறையான எண்ணங்கள் உடைய ஒருவன் ,இந்த உலகத்தில் எல்லாமே மாறக் கூடியது. காலம் நிச்சயம் நல்ல விளைவுகளைக் கொடுக்கும் என நினைப்பான். மாறாக, எதிர்மறையான எண்ணங்கள் உடையவன், இந்த உலகத்தில் எனக்கு மட்டும் தான் இப்படி நடக்கிறது என்றும், இந்த நிலை மாறவே மாறாது என்றும் புலம்புவான். எவ்வாறு நீங்கள் இருக்க வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.
⭐கசப்பான அனுபவங்களை ஆராயுங்கள் :
நாம் கசப்பான அனுபவங்களை எண்ணிப் பார்க்கவே மாட்டோம்; அதை தவிர்த்து விடுவோம் ; ஏனெனில், அது நமக்கு சோகத்தைத் தரும் என்பதால். ஆனால், உண்மையில் கசப்பான அனுபவங்களில் தான் நாம் பாடங்களை கற்கிறோம் ; நாம் இன்னும் வலிமை அடைகிறோம். கசப்பான அனுபவங்களில் இருந்து நாம் என்ன கற்றுக் கொண்டோம் என்பதை கவனியுங்கள்.
⭐உங்கள் உடல் மொழியைப் பயன்டுத்துங்கள் :
உங்களது உடலும், உங்களது மனமும் தொடர்புடையது. உங்களால் ஃபாஸிட்டிவ் ஆக உணர முடியவில்லையெனில் உங்கள் உடல் உங்களுக்கு எதிராக வேலை செய்கிறது என்று அர்த்தம். நேராக நிமிர்ந்து கம்பீரமாக நடப்பது கூட உங்களை உறுதியுடையவராகக் காட்டும்.
⭐உடற்பயிற்சி செய்யுங்கள் :
உடற்பயிற்சி செய்வது மன அழுத்தத்தைக் குறைக்கும். தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவர்கள் நல்ல மன நிலையையும், நல்ல உடல் நிலையையும் அடைகிறது என ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.
மிகவும் அருமையான பதிவு தொடர்ந்து அளிக்கவும்
ReplyDeleteCasino Archives - DrmCD
ReplyDeleteCasino 의왕 출장안마 Archives. Find all your favourite 강원도 출장마사지 casino 진주 출장마사지 games 화성 출장샵 and bonuses right here on DrmCD! We 광명 출장샵 have a great variety of games, from Slots & Blackjack to Roulette,